பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு ஒத்திகை

பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு ஒத்திகை

1 mins read
316f7bfb-d06c-449f-be92-83632c597066
கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிநவீன சுற்றுக்காவல் படகு மூலம் கண்காணிப்பில் ஈடுபடும் கடலோரக் காவல்படையினர். படம்: ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி: மாநி­லம் முழு­வ­தும் உள்ள கடற்­க­ரைப் பகு­தி­களில் நேற்று பாது­காப்பு ஒத்­தி­கைப் பயற்சி தொடங்கியது. இப்பயிற்சி இன்று மாலை­யு­டன் நிறை­வ­டை­கிறது.

கடலோரக் காவல்படையினரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரும் இணைந்து 'சாகர் கவாச்' என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சியை நடத்தினர்.

பயங்­க­ர­வா­தி­கள் போல வேட­மிட்டு கடல்­வ­ழி­யாக ஊடு­ரு­வு­ம் கட­லோ­ரக் காவல்படையினரை உள்­ளூர் காவல்­து­றை­யி­னர் மடக்­கிப் பிடிக்­க­வேண்­டும் என்­ப­து­தான் இந்­த ஒத்­தி­கை­யின் உத்­த­ரவு.

இதன்­படி, கும்­மி­டிப்­பூண்டி முதல் குமரி வரை­யி­லான கட­லோ­ரப் பகுதி­களில் பயங்­க­ர­வா­தி­கள் போல் ஆயு­தங்­க­ளு­டன் ஊடு­ரு­விய கட­லோ­ரக் காவல்படையினரை உள்ளூர் காவல்­து­றை­யி­னர் பிடித்­த­னர்.

கன்­னி­யா­கு­மரி கடல் பகு­தி­யில் மூன்று அதி­ந­வீன சுற்றுக்காவல் பட­கு­களில் சென்று பயங்­க­ர­வா­தி­களின் ஊடு­ருவலை முறியடிக்க கட­லோ­ரக் காவல்படையினர் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடு­பட்­ட­னர்.

குமரியில் உள்ள 42 கடற்­கரை கிரா­மங்­க­ளி­லும் 24 மணி நேர­மும் கண்­கா­ணிப்பில் ஈடு­பட்­ட­னர்.

மும்பையில் கடந்த 2008ல் பயங்கரவாதிகள் கடல் வழி புகுந்து தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கடலோரப் பாதுகாப்பை மாநில அரசு கள் பலப்படுத்தி வருகின்றன.