ஓட்டுநர், நடத்துநர்களுக்கு இரட்டிப்பு வசூல் படி
சென்னை: அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கிடைக்கும் வசூல் படி ஏறக்குறைய பாதியாகக் குறைந்துள்ளது. அதனை ஈடுகட்டும் வகையில் வசூல் படியை உயர்த்தித் தரவேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, இலவசப் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல் படி இரட்டிப்பாக வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமான முதல்வர்
வேலூர்: திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மூன்று நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, உதவி தேவைப்படுவோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். ஏற்கெனவே, இம்மாவட்டங்களுக்கு கடந்த 20, 21 தேதிகளில் அவர் ேமற்கொள்ள இருந்த பயணம் காய்ச்சலால் நின்று போனது.
தமிழகத்தில் 1,461 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ேமலும் 1,461 பேருக்கு கொவிட் பாதிப்பு உறுதியானது. 697 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,222 ஆக உயர்ந்தது. இறப்பு எதுவும் பதிவாகவில்லை. சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு பதிவானது. தர்மபுரி, சிவகங்கை மாவட்டங்களில் பாதிப்பு அறவே இல்லை. ெமாத்த பலி எண்ணிக்கை 38,026.
சிலம்பம் சுற்றிய மாப்பிள்ளை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பொன்னாக்குடியில் வசித்து வரும் ஆதி தமிழர் சிலம்பாட்ட பயிற்சிப் பள்ளி ஆசிரியரான சங்கர நாதனுக்கும் நெல்லையைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து வெளியே வந்த சங்கர நாதன், பட்டுேவட்டி, சட்டையுடன் மணக்கோலத்துடன் சிலம்பம் சுற்றி திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்தக் காெணாளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சாலையோரம் கதைபேசிய
இருவர் உயிரிழப்பு
கடலூர்: சாலையோரமாக நின்று கதை பேசிக்கொண்டிருந்த இருவர்மீது கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், ஏ.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரமணி, 36, ராகுல்காந்தி, 30. இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். நண்பர்களான இவர்கள் விருத்தாசலம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பியாஸ்டா கார் வேகமாக வந்து மோதியது. விருத்தாசலம் காவலர்கள் காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

