சென்னை: சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பு வோருக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான ஒலி அலகு என்பது பகலில் 55 டெசிபலையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக் கூடாது என்றும் இதுதான் உடலுக் குத் தீங்கு விளைவிக்காத ஒலி அலகுகள் என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
ஆனால், இந்த ஒலி அலகுகளை மீறும் வகையில் காதைப் பிளப்பது போல் பல வாகனங்களும் ஒலி எழுப்பிச் செல்கின்றன, வருகின்றன.
இதைக் கருத்தில்கொண்டு ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் 'நோ ஹான்கிங்' (ஹாரன் ஒலி எழுப்புவதில்லை) என்ற விழிப் புணா்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொடா்ச்சி யாக, தேவையின்றி ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப் புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

