நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கின் அலுவலகத்திற்கு வந்திருந்த லட்சுமி, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவின் தாள்களைத்தான் லட்சுமி இப்படி மாலையாக அணிந்துள்ளார்.
படம்: தமிழக
ஊடகம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த லட்சுமி என்ற பெண், தான் கொடுக்க விரும்பிய கோரிக்கை மனுவின் தாள்களை மாலையாக அணிந்தபடி வந்திருந்தார்.
ஆட்சியர் ஸ்ரேயா சிங்கிடம் அவர் அளித்துள்ள மனுவில், "நான் நாமக்கல் நகரில் வாடகை வீட்டில் எனது மகனுடன் வசித்து வருகிறேன். கடந்த 2016ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரி யத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு அதற்குரிய தொகை யைச் செலுத்தினேன். ஆனால், வீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் எனது மனு தள்ளுபடி செய்யப் பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துவிட்டேன். ஆனால், ஒரு பயனும் இல்லை.
இச்சூழலில், கடந்த 2021ஆம் ஆண்டு நான் வசிக்கும் இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும், கடந்த 2016ல் நான் விண்ணப்பம் செய்த அதே பகுதி யில் காலியாக உள்ள வீட்டை தனக்கு ஒதுக்கீடு செய்துதரும்படி மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

