சென்னைக்கு உதவும் வகையில் கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று ஆந்திர மாநிலத்திடம் தமிழகம் முன்பு பல முறை கேட்டதுண்டு. ஆனால் அந்தக் காலம் இப்போதைக்கு மலையேறி விட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள பூண்டி (படம்) உள்ளிட்ட நீர்த் தேக்கங்கள் எல்லாம் நிரம்பி விட்டதால் ஜூலை 1ஆம் தேதி முதல் கிருஷ்ணா ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட வேண்டாம் என தமிழக அரசு ஆந்திராவுக்குக் கடிதம் எழுதி இருக்கிறது. கடந்த மே 1ஆம் தேதி முதல் சென்னை கிட்டத்தட்ட 2.4 டிஎம்சி அடி (1,000 மில்லியன் கனஅடி) கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரைப் பெற்றுள்ளது என்பதைக் கடிதத்தில் தமிழக நீர்வளத்துறை சுட்டியது.

