சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பில் மறு விசாரணை நடக்கிறது.
முன்னாள் முதல்வரின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரும் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மற்றொரு கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிப்பதாக தகவல்கள் கூறின.

