சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடந்தபோது மீன்வளத்துறை வாக்கிடாக்கிகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டது.
ஊழல் ஒழிப்புத் துறை அந்த விவகாரம் பற்றி ஓராண்டுக்கும் மேலாக இன்னமும் மவுனமாக இருப்பது ஏன் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேட்டார்.
முன்னாள் அமைச்சரான டி ஜெயகுமார், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
இப்போது இவர் அதிமுகவின் இரண்டு பெரும் தலைவர்களில் ஒருவரான ஓ. பன்னீர் செல்வத்தை எதிர்த்து வருகிறார்.
இப்போது திமுக ஆட்சி நடக்கிறது. ஆனால் ஊழல் ஒழிப்புத் துறை வாக்கிடாக்கி விவகாரம் பற்றி இன்னமும் வாய்மூடியே இருந்து வருகிறது.
வாக்கிடாக்கி ஊழல் பற்றி புகார் தாக்கலாகி அது நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது.
இருந்தாலும்கூட இதில் திமுக ஆட்சியின் கீழ் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று டுவிட்டரில் தினகரன் குறிப்பிட்டுஉள்ளார்.

