பச்சைக்கிளி மாயம்: தேடி கண்டுபிடிக்க சுவரொட்டி உதவி

பச்சைக்கிளி மாயம்: தேடி கண்டுபிடிக்க சுவரொட்டி உதவி

1 mins read
53e94e1b-3ebb-4b2d-84ff-2a0b873483ae
-

மதுரை: மதுரையில் மாயமாகி விட்ட தன் ஆசைக் கிளியைத் தேடி கண்டுபிடிக்க சுப்புராமன் என்பவர் மதுரை முழுவதும் சுவரொட்டி (படம்) வேட்டை யைத் தொடங்கி இருக்கிறார்.

சுவரொட்டியைப் படித்துப் பார்த்து பலரும் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தனது கிளியை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சுப்புராமன் அழுது கொண்டே கூறினார்.

பச்சைக்கிளியைப் பிடித்து வந்து அதற்கு 'வெல்வெட்' என்று பெயர் வைத்து சுப்பு ராமன் குடும்பத்தினர் செல்ல மாக வளர்த்து வந்தனர்.

அந்தப் பாசமிகு பெண் கிளி கடந்த 20ஆம் தேதி சுப்புராமனின் வீட்டின் கதவு திறந்திருந்தபோது வெளியே பறந்து போய்விட்டது. கிளி பிரிந்து போனதை அறிந்து சுப்புராமன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பல இடங்களிலும் தேடி கிளி கிடைக்காததால் சுவரொட்டி இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

வெல்வெட் கிடைத்தால் தான் தங்களுக்கு நிம்மதி என்று சுப்புராமன் கவலையுடன் தெரிவித்தார்.