எம்ஜிஆரின் பேரன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை

எம்ஜிஆரின் பேரன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை

2 mins read
3b5d0383-187e-4593-abbb-901482b211e8
-

சென்னை: ஜூலை 11ஆம் தேதி அதி­முக பொதுக்­குழு கூட்­டம் நடை­பெ­றாது. என் ஆத­ர­வும் தொண்­டர்­க­ளின் ஆத­ர­வும் ஓ.பன்­னீர்­செல்­வத்­துக்­குத்தான். இதைச் சொல்­வ­தில் எனக்­குப் பய­மில்லை. இத­னால் என் பதவி பறி­போ­னா­லும் கவ­லை­யில்லை என்று நடி­க­ரும் மறைந்த முன்­னாள் முதல்­வ­ரு­மான எம்­ஜி­ஆ­ரின் பேரன் ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

அதி­மு­க­வுக்கு ஒற்­றைத்­தலைமை தான் வேண்­டும் என ஈபி­எஸ் நினைத்­தால், ஓபி­எஸ்சை தலைமை ஏற்­கச் சொல்­லி­விட்டு ஈபி­எஸ் விலகி­விட வேண்­டி­ய­து­தானே என வும் அவர் கேட்­டுள்­ளார்.

எம்­ஜி­ஆர் இளை­ஞ­ரணி துணைச் செய­லா­ள­ரான ராமச்­சந்­தி­ரன் சென்­னை­யில் செய்­தி­யா­ளர் களி­டம் பேசி­ய­போது, "ஈபி­எஸ்­சுக்கு எந்த ஆத­ர­வும் இல்லை. மக்­க­ளின் கருத்­து­க­ளைக் கேட்­டீர்­களா? பகுதி, மாவட்­டச் செய­லா­ளர்­கள் ஈபி­எஸ்­சுக்­குத்­தான் ஆத­ர­வ­ளிப்­பேன் என்­பார்­கள். அதனை ஒரு பயத்­தில் சொல்­கி­றார்­கள். நான் ஓபி­எஸ்­சுக்­குத் தான் ஆத­ரவு கொடுப்­பேன். இரு­வ­ருமே நன்­றா­கவே கட்­சியை வழி­ந­டத்தி வந்­த­னர். ஆனால், ஏன் தேவை­யின்றி ஒற்­றைத் தலை­மை­யைக் கொண்டு வர விரும்­பு­கி­றார்­கள்? ஏன் ஓபி­எஸ்சை கட்­சியை விட்டு துரத்த வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள் எனத் தெரி­ய­வில்லை.

"எத்­த­னையோ அவர் நல்­லது செய்­துள்­ளார். பல­முறை கட்­சி­யைக் காப்­பாற்றி உள்­ளார்.

"கட்­சி­யில் பிரச்­சினை வரக்­கூடாது என விட்­டுக்­கொ­டுத்து போனது தவறா? விட்­டுக்­கொ­டுத்­துப்போனால் கட்­சியை ஒட்­டு­மொத்­த­மாக விட்­டுக்­கொ­டுத்­துப் போக­வேண்­டும் என்று சொல்வதா?" என்றும் அவர் வின­வி­யுள்­ளார்.

அதிமுக கட்சி இரண்டாகப் பிரியக்கூடாது, உடையக்கூடாது என்று தான் என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கமிது. இப்போது ஏன் ஒற்றைத் தலைமை?

ராமச்­சந்­தி­ரன்