உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு; சின்னம் இல்லை

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு; சின்னம் இல்லை

2 mins read
5bdc9941-c812-4bcf-8792-b817dab752f7
-

சென்னை: தமிழ்­நாட்­டின் மிக முக்­கிய எதிர்க்­கட்­சி­யான அதி­முக உள்­ளாட்சி இடைத்­தேர்­தலை புறக்­க­ணித்­து­விட்­டது.

அதி­மு­க­வுக்கு யார் தலைமை ஏற்­பது என்ற பிரச்­சினை தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளான எடப்­பாடி பழ­னி­சா­மிக்­கும் ஓ. பன்­னீர்­செல்­வத்­துக்­கும் இடை­யில் இன்­ன­மும் இணக்­கம் ஏற்­ப­டா­மல் இருப்­பதே இதற்­கான கார­ணம்.

தமிழ்­நாட்­டில் காலி­யாக உள்ள உள்­ளாட்சி அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 510 பத­வி­க­ளுக்கு ஜூலை 9ல் இடைத்­தேர்­தல் நடக்­கிறது.

அந்­தப் பத­வி­களில் 34 பதவி களுக்­குக் கட்சி அடிப்­ப­டை­யில் தேர்­தல் நடக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது. இடைத்­தேர்­த­லுக்­கான வேட்புமனுக்­க­ளைத் திரும்­பப் பெற நேற்று இறுதி நாளாக இருந்­தது.

ஆனால் அதி­முக தரப்­பில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து படி­வங்­களில் யார் கை யெழுத்­தி­டு­வது என்­ப­தன் தொடர்­பில் ஈபி­எஸ், ஓபி­எஸ் இரு­வ­ருக்­கும் இடை­யில் இணக்­கம் ஏற்­ப­ட­வில்லை. நேற்று மாலை 3 மணிக்கு முன்­பு படி­வங்­க­ளைத் தாக்­கல் செய்­தால்­தான் அதி­மு­க­வின் வேட்­பா­ளர்­க­ளுக்கு இரட்டை இலை சின்­னம் ஒதுக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இரட்டை இலை சின்­னம் கிடைப்­ப­தில் சிக்­கல் நில­வி­ய­தால் உள்­ளாட்­சித் தேர்­த­லையே அதி­முக புறக்­க­ணித்து­விட்­ட­தாக தக­வல்­கள் கூறின.

மயி­லா­டு­துறை, தஞ்­சா­வூர், காஞ்­சி­பு­ரம் உள்­ளிட்ட பல நகர்­க­ளை­யும் சேர்ந்த வார்­டு­களில் அதி­முக வேட்­பா­ளர்­கள் கள­மிறங்­க­வில்லை.

என்­றா­லும் கவுன்­சி­லர்­கள், பேரூ­ராட்சி கவுன்­சி­லர்­கள் உள்­ளிட்ட இதர பல ஊராட்சி பதவி இடங்­க­ளுக்கு அதி­முக சார்­பில் போட்­டி­யிட பல­ரும் வேட்பு மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­துள்ளனர்.

ஆனால், அவர்­களும் படி­வங்­களைத் தாக்­கல் செய்­யாத நிலை யில், சுயேச்சை வேட்­பாளர்­க­ளா­கவே அவர்­கள் கரு­தப்­படு­வார்­கள் என தக­வல்­கள் கூறின.

இத­னி­டையே, ஜூலை 11ஆம் தேதி நடக்­க­வி­ருக்­கும் அதி­முக பொதுக்­குழு கூட்­டத்­திற்­குத் தடை விதிக்க இய­லாது என்று சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதை­ய­டுத்து கூட்­டத்­திற்­கான ஏற்­பா­டு­கள் சூடு­பி­டித்­துள்­ளன.