பேரையூர்: மதுரை மாவட்டம், வில்லூர் அருகே உள்ள உவரி பெரிய கண்மாயில் 500 ஆண்டுகள் பழமையான நீர்ப் பங்கீட்டு முறை குறித்த கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் லிங்க வடிவமான தனித் தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது (படம்). இதனை ஆய்வு செய்தபோது கி.பி. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீட்டு முறை கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரான முனீஸ்வரன் கூறுகையில், நீர்ப் பங்கீட்டு முறையை சங்ககாலம் முதல் தொன்றுதொட்டு இப்போது வரை பின்பற்றி வருகிறோம்.
கலிங்கு என்பது நீரை முறையாக வெளியேற்ற கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம். இது, கலிங்கல், கலிஞ்சு என்றும் அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்து கற்களை ஊன்றி உள்பகுதியில் ஒரே மாதிரி யான இடைவெளி விட்டு பலகை, மணல் மூட்டைகளைச் ெசருகி நீர் வெளியேறும் அளவும் முறையும் ஒழுங்குபடுத்தப்படும் என்றார்.

