சி.வி. சண்முகம்: பன்னீர்செல்வம் பின்னால் ஸ்டாலின் உள்ளார்

சி.வி. சண்முகம்: பன்னீர்செல்வம் பின்னால் ஸ்டாலின் உள்ளார்

1 mins read
e90d8d47-d8a6-49da-afc6-3b90b2a85c9a
-

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை திமுக இயக்குவதாக அதி­மு­க­வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார்.

சென்னையில் எடப்பாடி பழனி சாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், "தமி­ழ­கத்­தில் குற்­றங்­க­ளைத் தடுக்­கா­மல் அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்­கை­யில் திமுக அரசு ஈடு­பட்டு வரு­கிறது.

"லஞ்ச ஒழிப்புக் காவல்­து­றை­யினர் திமு­க­வின் தொண்­டர் படை­யாகச் செயல்­ப­டு­கின்றனர்," என குற்­றம்­சாட்­டி­னார்.

"திமு­க­வு­டன் உற­வா­டிக் ெகாண்டே, அதி­முக இயக்­கத்­துக்கு துரோ­கம் செய்து கொண்­டி­ருப் பவர்­க­ளுக்குத் துணை­யாக ஸ்டா­லின் அரசு உள்­ளது.

"திமுக அரசு எங்­களை மிரட்­டப் பார்க்­கிறது, பணிய வைக்­கப் பார்க்­கிறது. ஆனால், ஒரு­போ­தும் இது நடக்­காது.

"ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்து வருகிறார். ஓபி­எஸ் பின்­னால் திமுக அரசு உள்­ளது என்ற குற்றச் சாட்டை பொது­மக்­கள் உள்ளிட்ட பலரும் முன்­வைத்து வரு­கின்­ற­னர். இதில் எந்த ரக­சி­ய­மும் இல்லை. கைப்­புண்­ணுக்கு எதற்கு கண்­ணாடி?" என்று சிவி சண்­மு­கம் வினவினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டு தல் காரணமாகவே திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.