நாகர்கோவில்: கன்னியாகுமரியில் 150 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரம் ரவுண்டானாவில் 150 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.
அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, இதற்கான பணிகளைத் துவக்கி னார்.
இதுதான் தமிழகத்தின் பெரிய கொடிக் கம்பம். அதில், 32 அடி உயரம், 48 அடி நீளம், அகலம் கொண்ட தேசியக் ெகாடியை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்பி விஜயகுமார் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இரவு நேரத்தில் மின்விளக்கில் ஜொலிக்கும் வகையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

