சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் 30 பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ஆறு கடைகளில் எத்திபோன் என்ற ரசாயனம் தெளித்து பழுக்கவைத்த 7 டன் மாம்பழம், 500 கிலோ வாழைப்பழத்தைப் பறிமுதல் செய்தனர்.
பொதுவாக அரிசியில் மாங்காயை வைக்கும்போது சில நாள்களில் பழமாகிவிடுவதற்கு இயற்கையாக ரசாயன வாயு உருவாவதே காரணம். ஆனால், சீக்கிரமாக பழத்தை பழுக்க வைக்க பழத்தின் மீது நேரடியாக எத்திபோன் வாயுவைத் தெளிப்பது ஆபத்து என அதிகாரிகள் எச்ச ரிக்கின்றனர். ஒரு மணி நேர மாவது பழத்தை தண்ணீரில் ஊறப் போட்டு சாப்பிடும்படி அதி காரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

