ஒரேநேரத்தில் மூன்று உலகச் சாதனை நிகழ்த்திய சிறுவன்

ஒரேநேரத்தில் மூன்று உலகச் சாதனை நிகழ்த்திய சிறுவன்

1 mins read
44c638d7-3369-4761-b69e-c406b6c18c52
தான் பெற்ற மூன்று உலகச் சாதனை சான்றிதழ்களுடன் ரவிகிருஷ்ணா. படம்: தமிழக ஊடகம் -

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவன் ரவி கிருஷ்ணா, ஒரு நிமிடத்தில் 32 முறை பாத குண்டலாசனம் செய்து மூன்று உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - நவநீதம் தம்பதியர். இவர்களது மகன் ரவிகிருஷ்ணா. ஆறாம் வகுப்பில் படித்து வருகிறார்.

இவர், இரு கால்களுக்கு இடையே உடலை முன்னோக்கி வளைத்து, பின்புறமாகத் தலையை மேல்நோக்கிப் பார்க்கும் பாத குண்டலாசனம் என்னும் யோகா சனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து சாதனை படைத்து உள்ளார்.

ரவிகிருஷ்ணாவின் சாதனை, 'வேர்ல்டுவைட் புக் ஆஃப் ரெக்கார்டு', 'அசிஸ்ட் உலக சாதனை', 'இண்டர்நேஷல் புக் ஆஃப் ரெக்கார்டு' ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.