கால் வலியால் அவதி: காந்திமதி யானைக்கு தோல் காலணிகள்

திரு­நெல்­வேலி: நெல்­லை­யப்­பர் கோயி­லில் காந்­தி­மதி என்ற 52 வயது பெண் யானை பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கிறது. அதற்கு, 12,000 ரூபா­யில் நான்கு தோல் காலணி களைத் தயா­ரித்து வழங்கி பக்­தர் கள் வியக்க வைத்­துள்­ள­னர்.

திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் அருள்­மிகு நெல்­லை­யப்­பர்-காந்தி மதி அம்­மன் கோயில் உள்­ளது. இந்­தக் கோயி­லுக்­குச் சொந்­த­மான காந்­தி­மதி யானை நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், வயோ­தி­கம் காரண மாக காலில் மூட்டு வலி ஏற்­பட்டு பெரும் அவ­திப்­பட்டு வரு­கிறது.

இத­னால், காந்­தி­மதி யானைக்கு நடக்­கும்­போது கால்­வலி ஏற்­ப­டா­மல் இருக்­க­வும் மூட்டு வலி­யில் இருந்து பாது­காத்­துக்­கொள்­ள­வும் உத­வும் வகை­யில் மருத்­து­வக் குணம் வாய்ந்­த­தா­கக் கூறப்­படும் தோல் கால­ணி­க­ளைப் பக்­தர்­கள் யானைக்கு வழங்­கி­யுள்­ள­னர்.

பார்ப்­ப­தற்கு குடு­வை­க­ளைப் போல் காட்­சி­ய­ளிக்­கும் கால­ணி­கள் குறித்து யானைப் பாகன் கூறுகையில், “இக்கால­ணி­களை யானை­யின் கால்­களில் பொருத்தி பயிற்சி அளிக்­கப்­படும். அதன்­பிறகு திரு­வி­ழாக்­க­ளி­லும் சுவாமி சப்­பர வீதி உலா­வின்­போ­தும் யானைக்கு கால­ணி­கள் பொருத்­தப்பட்டு உலா வரும்,” என்­றார்.

ஆனித் திரு­விழா உள்­ளிட்ட முக்­கிய நிகழ்­வு­க­ளின்­போது காந்தி­மதி யானை சுவாமி­யின் முன்பு கம்­பீ­ர­மாகச் செல்வது வழக்கம்.

தமி­ழ­கத்­தி­லேயே இப்போதுதான் முதன்­மு­த­லாக நெல்லையப்பர் கோவில் யானைக்­கு காலணி அணி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!