'இந்து கோயில்களில் மற்ற மதத்தவர் வழிபடத் தடையில்லை'

'இந்து கோயில்களில் மற்ற மதத்தவர் வழிபடத் தடையில்லை'

2 mins read
5a0557b1-6a27-4d19-88d9-150c51baf5b8
-

மதுரை: இந்து கோயில் விழாக்­களில் மற்ற மதத்­த­வர்­கள் பங்­கேற்­கத் தடை விதிக்­க­மு­டி­யாது என உயர் ­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்ை­தச் சேர்ந்­த­­ சி.சோமன் என்பவர் தொடர்ந்த வழக்­கில் இதுபோல் உத்தரவிடப்பட்டுள்ளது.

திரு­வட்­டாறு அருள்­மிகு ஆதி­கே­சவ பெரு­மாள் திருக்­கோ­யி­லில் நாளை 6ஆம் தேதி குடமுழுக்கு நடை­பெ­ற உள்ளது. இதில், தக­வல் தொழில்­நுட்­பத்­துறை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ் பங்­கேற்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­சர் மாற்று மதத்­தைச் சேர்ந்­த­வர்.

குடமுழுக்கு விழா அரசு விழா­வாக நடை­பெ­றும்போது வழக்­க­மான சம்­பி­ர­தா­யங்­கள் கடைப்­பிடிக்­கப்­ப­டா­மல் கோயிலின் புனி­தம் கெடு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது.

எனவே, இவ்விழா­வில் இந்­துக்­கள் அல்­லா­தோர் கோயி­லுக்­குள் நுழைய அனு­ம­திக்­கக் கூடாது என உத்­த­ர­விட வேண்­டும் என்று மனு­வில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இம்மனுவை விசா­ரித்த நீதி­பதி­கள் பி.என்.பிர­காஷ், ஆர்.ஹேம­லதா அமர்வு பிறப்­பித்த உத்­த­ரவு: ''இந்­துக் கோயில்­களில் இந்­துக்­கள் அல்­லா­தோர் நுழைய வேண்­டாம் என அறி­விப்பு பல­கை­கள் கோயில்­க­ளின் முன்பு வைக்­கப்­பட்­டுள்­ளன. அதேநேரத்­தில் குட முழுக்கு விழா­வில் இந்­துக்­கள் அல்­லா­தோர் பங்­கேற்­கக்­கூ­டாது என இந்து சமய அற­நி­லை­யத் துறை விதி­களில் கூறப்படவில்லை. 120 கோடி மக்­கள் தொகை கொண்ட நாட்­டில், இறை நம்­பிக்கை கொண்­ட­வர்­கள் கோயி­லுக்குச் செல்­லும்­போது, அவர்­க­ளின் மதத்தை உறுதி செய்­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வகுக்­கும்.

''பிர­பல பாட­கர் யேசு­தாஸ் வேறு மதத்தைச் சேர்ந்­த­வர்தான். இருப்­பி­னும் அவர் ஏரா­ள­மான இந்து கட­வுள் பாடல்­களைப் பாடி­யுள்­ளார். அவ­ரது பாடல்­கள் கோயில்­களில் ஒலிக்­கப்­ப­டு­கின்­றன. வேளாங்­கண்ணி தேவா­ல­யத்­திற்­கும் நாகூர் தர்­கா­விற்­கும் ஏரா­ள­மான இந்­துக்­கள் சென்று வழி­பட்டு வரு­கின்­ற­னர்.

"எனவே இந்த விவ­கா­ரத்தை பரந்த மனப்­பான்­மை­யு­டன் அணுக வேண்­டும். எனவே, மனு தள்­ளு­படி செய்­யப்­ப­டு­கிறது,'' என்று நீதி­பதி­கள் உத்­த­ர­வில் கூறி­யுள்­ள­னர்.