சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஹோட்டலில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழகத்தில் தொழில் நிறுவனங் களைத் தொடங்க 60 தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம் ரூ.125,000 கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப் பட உள்ளன. அத்துடன், இந்த முதலீட்டால் 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இம்மாநாட்டைத் தொடங்கிவைத்து முதல்வர் உரையாற்றியபோது, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
"கடந்த 2020ல் தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலங் களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை இப்போது மூன்றாவது இடத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். விரைவில் முதலிடத் துக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்.
"தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலும் கட்டமைப்பு வசதிகளும் மிகவும் ஏதுவாக உள்ளதாகவும் சாலை, ஏற்றுமதி-இறக்குமதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாகவும் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு முன்னின்று செய்துதரும்," என்றும் கூறினார்.
இந்தப் புதிய 60 ஒப்பந்தங்கள் மூலம் புதிதாக 125,000 கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டு, 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இந்த நிகழ்ச்சியில் ரூ.1,494 கோடி முதலீட்டில் முடிவுற்ற 12 நிறுவனங்களின் புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.22,252 கோடி முதலீட்டில் அமைய உள்ள 21 தொழில் நிறுவனங் களின் புதிய தொழிற்சாலைகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதன்மூலமும் 24,754 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், இதுவரை ரூ.220,000 கோடிக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் இதன்மூலம் 226,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.