தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 'ராணி பேரடைஸ்' திரை யரங்க உரிமையாளர் குமார் என்ப வருக்குச் சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
தஞ்சை பெரியகோவில் மேம் பாலம் அருகே இந்த திரையரங்கம் உள்ளது. இவரது வீடு கண்ணன் நகரில் உள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங் களையும் நடத்தி வருபவருமான குமார் மீது, வருமானத்திற்கு அதிக மாகச் சொத்து சேர்த்துள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.
அத்துடன், அவர் வருமான வரியையும் ஜிஎஸ்டி வரியையும் முறைப்படி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, 16 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குமாருக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள், அவரது வீடு உள்ளிட்ட நான்கு இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தச் சோதனை குறித்து இதுவரை எந்தவிதமான அதிகார பூர்வமான தகவலையும் வெளி யிடவில்லை.

