திரையரங்க உரிமையாளரின் வீடு, நிறுவனங்களில் சோதனை

1 mins read
fe2c1567-2ee9-4ecf-b6d4-26945aa4b45c
-

தஞ்­சா­வூர்: தஞ்சை மாவட்­டத்­தில் உள்ள 'ராணி பேர­டைஸ்' திரை யரங்க உரி­மை­யா­ளர் குமார் என்ப வருக்­குச் சொந்­த­மான நான்கு இடங்­களில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் நேற்று திடீர் சோதனை நடத்­தி­னர்.

தஞ்சை பெரி­ய­கோ­வில் மேம் பாலம் அருகே இந்­த திரையரங்­கம் உள்­ளது. இவ­ரது வீடு கண்­ணன் நக­ரில் உள்­ளது.

பல்­வேறு தொழில் நிறு­வ­னங் களை­யும் நடத்தி வரு­ப­வ­ரு­மான குமார் மீது, வரு­மா­னத்­திற்கு அதிக மாகச் சொத்து சேர்த்­துள்­ள­தாக புகார் கிளம்­பி­யுள்­ளது.

அத்­து­டன், அவர் வரு­மான வரி­யை­யும் ஜிஎஸ்டி வரி­யை­யும் முறைப்­படி செலுத்­தா­மல் வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, 16 பேர் கொண்ட வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் குமா­ருக்­குச் சொந்­த­மான தொழில் நிறு­வ­னங்­கள், திரை­ய­ரங்­கு­கள், அவ­ரது வீடு உள்­ளிட்ட நான்கு இடங்­க­ளி­லும் ஒரே நேரத்­தில் சோதனை நடத்­தி­ய­தாக தெரி­கிறது. இந்த சோத­னை­யில் முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி உள்ளதாக தக­வல்கள் கசிந்துள்ளன.

வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் இந்தச் சோதனை குறித்து இது­வரை எந்­த­வி­த­மான அதி­கார பூர்­வ­மான தக­வ­லை­யும் வெளி யிட­வில்லை.