மியன்மார் சென்ற இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொலை

1 mins read
979a1b40-9b33-46fd-ba12-15f5edafda46
-

மியன்­மார்: இந்­தி­யா­வின் மணிப்­பூர் மாநி­லத்­தில் வசித்து வந்த தமிழ்­நாட்­டைச் சேர்ந்த பி மோகன் என்ற ஆட்டோ ஓட்­டு­ந­ரும் எம். அய்­யனார் என்ற வியா­பா­ரி­யும் மணிப்­பூர் மாநி­லத்­தில் உள்ள மோரே என்ற இடத்­தில் இருந்து மியன்­மாருக்­குச் சென்­ற­னர்.

அப்­போது தமு என்ற இடத்­தில் அவர்­கள் இரு­வ­ரும் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­தா­கத் தக­வல்­கள் கூறின. மோக­னுக்­குச் சில மாதங்­க­ளுக்கு முன்­தான் திரு­ம­ணம் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மோகன், அய்­ய­னார் இரு­வ­ரின் உடல்­கள் தமு நக­ரில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் உள்­ளன.

மியன்­மார் ராணுவ அர­சு­டன் தொடர்­பு­கொண்டு விவ­ரங்­க­ளைக் கேட்­டுள்ள இந்­திய அரசு, உடல்­களைத் தாய்­நாட்­டுக்­குக் கொண்டு வர முயற்சி எடுத்­துள்­ளது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து கூறிய மோரே தமிழ் சங்­கத்­தி­னர், அவ்விரு­வ­ரும் மியன்­மார் எல்­லைக்­குள் நுழைந்­த­தால், அவர்­களை உள­வா­ளி­கள் எனக் கருதி அந்­நாட்டு ராணு­வத்­தி­னர் சுட்­டுக் கொன்று இருக்­க­லாம் என்­ற­னர்.

மோக­னும் அய்­ய­னா­ரும் தங்­கள் நண்­ப­ரின் பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக உரிய அனு­ம­தி­யின்றி எல்­லைத் தாண்டி சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.