தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேரங்காடிகளைப் போல் ரேசன் கடைகளிலும் மளிகைப் பொருள்கள் விற்பனை

2 mins read
3cf3e940-3955-4a43-8bc8-f484e2749c72
சென்னையில் உள்ள ரேசன் கடை. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள ரேசன் கடை­களில் மிக விரை­வில் பேரங்­கா­டி­களில் கிடைக்­கக்­கூ­டிய அனைத்து மளி­கைப் பொருள்­களும் விற்­ப­னைக்கு வரும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை தமி­ழக அரசு மேற்­கொண்டு வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் சுமார் 35 ஆயிரம் ரேசன் கடை­கள் உள்­ளன. அவற்றுள் சுமார் பத்­தா­யி­ரம் கடை­கள் பகுதி நேர­மாக மட்­டுமே இயங்­கு­கின்­றன.

இந்­தக் கடை­களில் குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்கு அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, பாமா­யில், மண்ணெண்­ணெய் ஆகியவை வழங்­கப்­ப­டு­கின்­றன. சில கடை­களில் மட்­டுமே இப்­பொ­ருள்­களுடன் தேநீர்த் தூள், உப்பு ஆகி­யவை­யும் விற்­கப்­ப­டு­கின்­றன.

கூட்­டு­ற­வுக் கடை­களில் சில மளிகைப் பொருள்­கள் விற்­கப்­படு­கின்­றன என்­றா­லும் போது­மான இட வசதி இல்­லா­த­தால் இந்த விற்­ப­னையை விரி­வு­ப­டுத்த முடி­ய­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ரேசன் கடை­களை நவீ­னப்­ப­டுத்த முதல்­வர் ஸ்டா­லின் உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதன் எதி­ரொலி­யாக, இனி ரேசன் கடை­களில் பேரங்­கா­டி­களில் கிடைக்­கும் பெரும்­பா­லான மளி­கைப் பொருள்­களை விற்­பனை செய்ய நட­வ­டிக்கை எடுக்கப்­படும் என அதி­கா­ரி­கள் தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

ரேசன் கடை­க­ளுக்குச் சொந்­தக் கட்­ட­டம் கட்­டு­வது, பொருள்கள் அனைத்­தும் தடை­யின்றி போது­மான அளவு கிடைப்­பதை உறுதி செய்­வது, பொதுமக்களின் கருத்­து­க­ளை­யும் குறை­க­ளை­யும் கேட்டு அவற்­றின் அடிப்­ப­டை­யில் நட­வடிக்கை எடுப்­பது என அதிகாரி­கள் மாநி­லம் முழு­வ­தும் வலம் வரு­கின்­ற­னர்.

"முதற்­கட்­ட­மாக ரேசன் கடை­களில் அனைத்து வகை மளிகைப் பொருள்­களும் விற்­கப்­படும். அதற்கு பொது­மக்­க­ளி­டம் கிடைக்­கும் வர­வேற்பைப் பொறுத்து அடுத்­தக்­கட்ட விரி­வாக்­கம் நடை­பெ­றும்.

"ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் இதற்­காக 20 முதல் 25 ரேசன் கடைகள் தேர்வு செய்­யப்­பட்டு வரு­கின்­றன," என்­கி­றார்­கள் அதிகாரிகள்.