சென்னை: தமிழக அரசின் நிதியுதவியுடன் கல்வெட்டு குறித்த கோடை காலப் பயிற்சி முகாம் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. பயிற்சியின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநா் சுந்தா் கணேசன் பங்கேற்றார். அவர் பேசுகையில், "1578ஆம் ஆண்டு, முதல் தமிழ் நூல் அச்சிடப்பட்டது. இன்று வரை ஏறக்குறைய இரண்டு லட்சம் நூல்கள் தமிழில் வெளிவந்திருக்கும். சங்க இலக்கியப் பதிப்புகளில் திருமுருகாற்றுப்படையே அதிக பதிப்புகளைக் கண்டுள்ளது. இது 70க்கும் மேற்பட்ட பதிப்புகளில் வெளிவந்துள்ளது," என்றாா் அவா்.
முன்னதாக, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசுகையில், "ஆண்டுதோறும் சுவடிகளும் கல்வெட்டுகளும் புதிது புதிதாகக் கண்டறியப்படுகின்றன. உவேசாவுக்குப் பிறகு புதிய ஓலைச் சுவடிகளை நூல்களாக வெளியிடுகிற வாய்ப்பு ஏற்படவேயில்லை. ஐந்திரம் போன்ற கற்பனை நூல்
களைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது. எனவே இதுபற்றிய அறிவியல் கண்ணோட்டம் உருவாகவேண்டும்," என்றாா்.
ஓலைச்சுவடிகளைப்
பாதுகாக்க தொழில்நுட்பர்கள்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கையில், "பனை ஓலைச் சுவடிகளை பாதுகாக்க தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில்களிலும் மடங்களிலும் கிடைக்கப்பெறும் அரிய பனை ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

