குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் மீட்பு; 60 பேர் மரணம்

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் மீட்பு; 60 பேர் மரணம்

1 mins read
39ab7330-9274-470e-b18b-0efd63680d76
-

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வால்சட் மாவட்டத்தில் உள்ள அவு ரங்கா, அம்பிகா உள்ளிட்ட ஆறு களில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு களில் வெள்ளம் சூழ்ந்தது. அம்பிகா ஆற்றின் நடுவே வெள்ளத் தில் சிக்கித்தவித்த 16 பேரை கட லோரக் காவல்படையினர் ஹெலி காப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.

கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை, வெள்ளத் தால் இம்மாநிலத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 11,000 பேர் வீடுகளை இழந்திருப்ப தாகவும் அம்மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியது.

இதனிடையே, கேரள மாநிலம், மூணாறு பகுதியிலும் கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.