முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு ரயில்வே பணி

முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு ரயில்வே பணி

1 mins read
e4b34d4f-7cea-4ab0-bff4-303b594b7aba
-

சத்­தீஸ்­கர்: இந்­திய வர­லாற்­றில் முதன்­முறையாக 10 மாதக் குழந்தைக்கு இந்­திய ரயில்­வே­யில் பணி வழங்­கப்­பட்டுள்­ளது.

சத்­தீஸ்­கர் மாநி­லத்­தைச் சேர்ந்த ராஜேந்­தி­ர­கு­மார் என்பவர் ரயில்வே ஊழி­ய­ராகப் பணி­யாற்றி வந்­தார். கடந்த வாரம் நடந்த வாகன விபத்­தில் ராஜேந்­தி­ர­குமா­ரும் அவ­ரது மனை­வி­யும் உயி­ரிழந்­த­னர். விபத்­தில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர்தப்பிய இவர்­க­ளது 10 மாத குழந்தை ராதிகா யாதவுக்கு ரயில்வே விதிமுறைகளின்­படி பணி வழங்கப்பட உள்ளது. பாட்­டி­யின் பரா­ம­ரிப்­பில் உள்ள குழந்தைக்கு தந்­தை­யின் பணி வழங்­கப்­பட்டுள்­ளது. கைக் குழந்தை என்­ப­தால், அதன் கை ரே­கையைப் பதிவு செய்து பணி நிய­ம­னம் உறு­தி­ப­டுத்­தப்­பட்­டது. குழந்தை 18 வயதை பூர்த்­தி­செய்­த­தும், பணியில் சேர­லாம் என அதி­கா­ரி­கள் தெரிவித்துள்­ள­னர்.