ஓபிஎஸ் கொள்ளை அடித்ததாகப் புகார்

ஓபிஎஸ் கொள்ளை அடித்ததாகப் புகார்

1 mins read
71cdfe9a-f12c-40fa-aa00-5654101e3809
-

சென்னை: ஒருபக்கம் இபிஎஸ்க்கு பதவி, மறுபக்கம் ஓபிஎஸ் பதவிப் பறிப்பு என நேற்று முன்தினம் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எல்லாம், தான் வந்த வாகனத்தில் ஓபிஎஸ் ஏற்றிச்சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில், முக்கிய ஆவணங்களைக் கொள்ளை அடித்துச்சென்றதாக ஓபிஎஸ் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக பிரமுகர் ஆதி ராஜாராம் புகார் அளித்து உள்ளார். இதற்கு வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, ஓபிஎஸ்க்கு திமுக துணை போவதாக விமர்சித்தார். இதற்கு, மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் திமுக தலை யிடுவது கிடையாது என்றும் யார் மீதோ காட்டவேண்டிய கோபத்தை திமுக மீது பழனிசாமி காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பராதி கண்டனம் தெரிவித்துள்ளார்.