ஆடவர் பலி; ஐந்து திருநங்கைகள் சிறையில்

ஆடவர் பலி; ஐந்து திருநங்கைகள் சிறையில்

2 mins read
b80069d4-0e24-4128-8e30-a43b2cca81e2
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருந்த திருநங்கைகள் ரேஸ்மிகா, மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி. படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

கோவை: கோைவயில் உள்ள உண வகம் ஒன்­றில் பணி­பு­ரிந்து வரும் தர்­ம­லிங்­கத்­துக்­கும் திரு­நங்கை ஒரு­வ­ருக்­கும் ஏற்­பட்ட வாக்­கு­வாதம் முற்­றிய நிலை­யில், தர்­ம­லிங்­கத்தை திரு­நங்­கை­கள் பல­ரும் அடித்­துத் தாக்­கி­யுள்­ள­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்ட தர்­ம­லிங்­கம் உயி­ரி­ழந்த நிலை­யில், அவரை தாக்­கிய ஐந்து திரு­நங்­கை­கள் கைது செய்­யப்­பட்டு கோவை மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

தலை­ம­றை­வான கீர்த்தி என்ற திரு­நங்­கை­யைத் துடி­ய­லூர் காவல் துறை­யி­னர் தேடி­வ­ரு­கின்­ற­னர்.

அண்­மை­யில், கோவை மாவட்ட காவல் கண்­கா­ணிப்­பா­ளர் தலைமை யில் திரு­நங்­கை­களை அழைத்து, விழிப்புணர்வுக் கூட்­டம் நடத்தி, சாலை ஓரங்­களில் நின்று பாலி­யல் தொழி­லுக்கு ஆண்களை அழைக்­கக்­கூ­டாது என எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­த­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், கடந்த 8ஆம் தேதி இரவு, துடி­ய­லூ­ரில் உள்ள ஓர் உண­வ­கத்­தில் பணி­பு­ரிந்து வந்த பொன்­ன­ம­ரா­வ­தி­யைச் சேர்ந்த தர்­ம­லிங்­கம், 49, என்­ப­வர், தனது நண்­பர் பிர­வீ­னு­டன் ரேஸ்­மிகா என்ற திரு­நங்­கையை நாடிச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அப்­போது, இவ்­விரு ஆட­வர் களுக்­கும் திரு­நங்கை ரேஸ்­மிகா வுக்­கும் இடையே வாய்த்தகராறு ஏற்­பட்டு, ரேஷ்­மிகா கூச்­சல் போட்­டுள்­ளார்.

இத­னால், அங்கு ஓடி வந்த இதர திரு­நங்­கை­கள் மம்தா, கௌ தமி, ஹர்­னிகா, ரூபி, கீர்த்தி உள்­ளிட்­டோர் தர்­ம­லிங்­கத்­தை­யும் பிர­வீ­னை­யும் கடு­மை­யா­கத் தாக்கி யுள்­ள­னர்.

இரு­வ­ரில் பிர­வீன் அங்­கி­ருந்து தப்பி ஓடி­விட, தர்­ம­லிங்­கத்தை ரத்­தக் காயம் ஏற்­படும் அள­வுக்கு கடு­மை­யா­கத் தாக்­கி­விட்டு அங்­கி­ருந்து திரு­நங்­கை­கள் தப்பிச் சென்றுவிட்­ட­னர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

படு­கா­ய­ம­டைந்த தர்­ம­லிங்­கம், இரு­சக்­கர வாக­னத்­தில் செல்­லும் போது விழுந்­து­விட்­ட­தா­கக் கூறி கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்ந்­துள்­ளார்.

எனினும், சிகிச்சை பெற்று வந்த தர்­ம­லிங்­கம் இறந்­த­தால் வழக்கை கொலை வழக்­காக மாற்றி அவரை அடித்­த­வர்­க­ளைக் காவல்துறை யினர் தேடி­வந்­த­ நிலையில், இவர் கள் கைதாகி உள்ளனர்.