கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக் கணக்கான இளைஞர்களின் மூன்று கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வடவள்ளியில் செயல்பட்டு வந்த 'அஃேபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனம், இளைஞர்களைச் சிங்கப்பூரில் பணியில் அமர்த்துவதாக விளம்பரம் செய்திருந்தது.
பலரும் போட்டிபோட்டு பணத் தைக் கட்டி, வேலையில் சேர ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களிடம் விமான டிக்கெட்டுகளை வழங்கிய நிறுவனத்தினர், ஜூலை 8ஆம் தேதி சிங்கப்பூர் அைழத்துச் செல்வதாக உறுதி அளித்துள்ளனர்.
ஆனால், அந்தக் குறிப்பிட்ட தினத்தில் இளைஞர்கள் பயணம் செல்ல தயாராகி வந்தபோது நிறுவனத்தைப் பூட்டிவிட்டு நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.
விமான டிக்கெட்டுகளும் போலி என்பது தெரியவர, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 100க்கும் மேலான இளைஞர்கள், டிராவல்ஸ் உரிமையாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர்.
விளம்பரத்தை நம்பி ஏமாந்தோம்
தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி, கேரளாவைச் சேர்ந்த பலரும் இந்நிறுவனத்தில் வேலைக் காகப் பணம் செலுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிபிசி தமிழ் ஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில், "பல இடங்களிலும் விளம்பரம் செய்திருந்தனர். தினசரி நாளிதழ்களில்கூட விளம்பரங்கள் வந்திருந்தன. அதை நம்பித்தான் நான் உட்பட பலரும் பணம் கட்டி ஏமாந்துள்ேளாம்.
"சிங்கப்பூரில் வேலை தருவதாகக் கடிதம் கொடுத்தார்கள். நுழைவு அட்டைக்கான கடிதம் கொடுத்தார்கள். ஆனால், இவை அனைத்துமே ேபாலி என இப்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் ேமற்பட்டோர் வந்துள்ளோம். இன்னும் எத்தனை பேர் உள்ளனர் எனத் தெரியவில்லை. நிறுவனர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன், அலுவலகப் பணியாளர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர்தான் இதில் சம்மந்தப் பட்டுள்ளனர். மூன்று லட்சம் வரை பலரும் கொடுத்துள்ளனர்," என்று கூறினார்.

