வேலூர்: சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் விரைவில் திறக்கப்படும் என மத்திய சாலை, விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற பாஜக ஆேலாசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை விமானநிலையத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, விமானப் பயணச் சேவைகள் தொடங்கப்படும்," என்றார்.
"சென்னையில் புதிதாக பசுமை விமானநிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இரு இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
"நாடு முழுவதும் அடுத்த மூன்றாண்டுகளில் 80 புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
"வேலூரில் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் விமான நிலையப் பணிகள் முடிவடைந்து, விரைவில் போக்குவரத்து தொடங்கும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

