தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர்

தேசிய சின்னத்தை திறந்து வைத்த பிரதமர்

1 mins read
df390d2a-2fce-4a47-a55f-b9c818e67a44
-

தலைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரையில், நாட்டின் தேசிய சின்னமான 6.5 மீட்டர் உயரமுள்ள அசோகத் தூண் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். முழுவதும் வெண்கலத்தாலான இச்சிலையின் மொத்த எடை 9,500 கிலோ. நாடெங்குமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்களும் தொழிலாளர்களும் கடந்த ஆறு மாதங்களாக இச்சின்னத்தை வடிவமைத்து வந்தனர்.

டாடா நிறுவனம் சார்பில் ரூ.971 கோடி செலவில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனைத் தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் இந்த கட்டடம் அமைய உள்ளது.

குளிர்காலக் கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம்: டுவிட்டர்