தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திரு ஸ்டாலினுக்கு இரண்டு நாள்களுக்கு முன் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். உடல் சோர்வாக இருந்ததாகவும், பரிசோதனையில் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசியைச் போட்டுக்கொள்ளுமாறு அவர் பதிவிட்டுள்ளார்.

