'தமிழகத்தில் வீடுகளின் விலை அடுத்த மூன்று மாதங்களில் 15% அதிகரிக்கும்'

'தமிழகத்தில் வீடுகளின் விலை அடுத்த மூன்று மாதங்களில் 15% அதிகரிக்கும்'

2 mins read
9694a65c-3cbd-4211-af7e-c5a838614953
-

சென்னை: கொரோனா நெருக்­க­டி­யும் கட்­டுப்­பா­டு­களும் குறைந்­ததை அடுத்து, சொந்த வீடு வாங்கு­வதில் மக்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்கி உள்­ள­தாக இந்­திய ரியல் எஸ்­டேட் மேம்­பாட்­டா­ளர் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான 'கிரெ­டாய்' தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அதன் சென்னை பிரி­வுத் தலை­வர் சிவ­கு­ரு­நா­தன், தமி­ழ­கத்­தில் வீடு­க­ளின் விலை அடுத்த மூன்று மாதங்­களில் 15 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்­றார்.

கட்­டு­மா­னப் பொருள்­க­ளின் விலை உயர்ந்­துள்­ள­தா­க­வும் அதன் கார­ண­மாக செல­வு­கள் அதி­க­ரித்­துள்­ளன என அவர் குறிப்­பிட்­டார்.

"ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்ந்­துள்­ள­தால் சொந்த வீடு வாங்க நினைக்­கும் மக்­கள் அது குறித்து விசா­ரிக்­கத் துவங்கி உள்­ள­னர்.

"இத­னால் புதிய வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ளது. கட்­டு­மா­னப் பணி­கள் முடிந்து விற்­கா­மல் தேங்­கிய வீடு­க­ளின் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது," என்­றார் சிவ­கு­ரு­நா­தன்.

நடப்­பாண்­டில் ஜூலை தொடக்­கம் வரை­யி­லான கால­கட்­டத்­தில், சென்­னை­யி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் 7,064 வீடு­கள் விற்­ப­னை­யாகி உள்­ள­தா­க­வும் இதில், கிரெ­டாய் உறுப்­பி­னர்­க­ளின் திட்­டங்­க­ளின் மூலம் 6,097 வீடு­கள் விற்­ப­னை­யாகி உள்­ளன என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சிமென்ட் விலை 28%, செங்­கல் விலை 12% உயர்ந்­துள்­ளது. இத­னால் ஒரு சதுர அடிக்­கான குறைந்­த­பட்ச கட்­டு­மான செலவு 2,000 ரூபா­யில் இருந்து 2,300 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

கட்­டு­மா­னப் பொருள்­க­ளின் விலை உயர்வு, அதி­க­பட்ச பதி­வுக் கட்­ட­ணம், ஜிஎஸ்டி ஆகி­ய­வற்­றால் ஏற்­படும் சுமை­கள் அதி­க­ரித்­துள்­ளன.

இத­னால் வீடு­க­ளின் விலை உயர்த்­தப்­பட உள்­ளது என்­றார் சிவ­கு­ரு­நா­தன்.

கடந்த 2017இல் ஒரு கிலோ 37 ரூபாய்க்கு விற்ற கட்­டு­மா­னக் கம்­பி­கள் விலை தற்­போது 82 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.