75 நாள்களுக்கு மூன்றாவது தடுப்பூசி இலவசம்

75 நாள்களுக்கு மூன்றாவது தடுப்பூசி இலவசம்

1 mins read
103b1a75-f539-4ef1-8cbf-e75e965a7c9a
-

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கொரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது. நேற்று முன்தினம் புதிதாக 20,139 பேருக்கு தொற்று உறுதியானது.

இது கடந்த ஐந்து மாதங்களில் பதிவான ஆக அதிக எண்ணிக்கையாகும். நேற்று முன்தினம் தொற்று பாதிப்பால் மேலும் 38 பேர் மாண்டுவிட்டனர்.

இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றா வது கொரோனா தடுப்பூசி (பூஸ்டர்) இலவசமாகப் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று முதல் 75 நாள்களுக்கு மூன்றாவது தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.

முன்னதாக, மூன்றாவது தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் பொதுமக்கள் போட்டுக்கொண்டனர்.

நாட்டில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி பேரில், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே மூன்றாவது ஊசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி மிக முக்கியமானது என்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மாக மூன்றாவது (பூஸ்டர்) தடுப்பூசி போடுவது என்று எடுக்கப்பட்ட முடிவானது, தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.