ரூ.4,389 கோடி மோசடி அம்பலம்

ரூ.4,389 கோடி மோசடி அம்பலம்

1 mins read
b772c8e2-7a13-4443-ae1e-ed89870d284b
-

புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த 'ஓபோ' கைபேசி நிறுவனம், 4,389 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே இந்நிறு வனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

ஓபோ இந்தியா நிறு வனம், சீனாவில் இருந்து பல்வேறு இயந்திரங்களை உரிய ஆவணங்களின்றி இறக்குமதி செய்துள்ளது என்றும் இதன்மூலம் முறைகேடாக ரூ.2,981 கோடி சுங்க வரிச்சலுகை யைப் பெற்றது என்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள் ளது. மேலும், சீனாவில் உள்ள நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தியதாக, ரூ.1,408 கோடி மோசடி செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.