சென்னை: மத்திய அரசின் சார்பில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5% பொருள் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 18ஆம் தேதி முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.3 வரை உயரும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இதனை எதிர்த்து தமிழகத்தில் மொத்தமுள்ள 8,000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 35,000க்கும் மேற்பட்ட அரிசி விற்பனைக் கடைகளை அடைத்து இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அரிசி ஆலை உரிமையாளர்களும் வணிகர் சங்கத்தினரும் இதனை அறிவித்துள்ளனர்.

