மதுரை: மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தை உலகத் தரத்துடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரங்கம் அமைய உள்ள இடத்தை இணைக்கும் வகையில் சிட்டம்பட்டி, வாடிப்பட்டி இடையே 3 கி.மீ. தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளை மிஞ்சும் வகையில், மருத்துவ வசதி யுடன் கூடிய ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

