நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிரா மங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால், உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் விடாது பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் நூற்றுக்கும் ேமற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் குன்னூர், கோத்தகிரி சாலைகளில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை யால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு 456 தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. மீட்பு, நிவாரணப் பணி களுக்காக 42 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
இங்குள்ள பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், இதில் குளிக்கவோ, மீன் பிடிக் கவோ, பரிசல்களில் ஆற்றைக் கடக் கவோ வேண்டாம் எனவும் கரை யோரம், தாழ்வான பகுதியில் வசிப்ப வர்கள் மேடான பகுதிகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

