18 பேரை இபிஎஸ் நீக்கியதற்கு 22 பேரை நீக்கி ஓபிஎஸ் பதிலடி

18 பேரை இபிஎஸ் நீக்கியதற்கு 22 பேரை நீக்கி ஓபிஎஸ் பதிலடி

2 mins read
1ff06a7f-8bc8-466d-8f28-34f3812eb888
-

சென்னை: அதி­முக தற்­போது ஓபிஎஸ், இபி­எஸ் என இரு அணி களா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

பன்­னீர்­செல்­வத்­தின் இரு மகன் கள், அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் என 18 பேரை எடப்­பாடி பழ­னிச்­சாமி அதி­மு­க­வில் இருந்து நேற்று முன்­தி­னம் மாலை நீக்­கி­னார்.

இதற்­குப் பதி­ல­டி­யாக இபி­எஸ் உள்­ளிட்ட 22 நிர்­வா­கி­க­ளைத் தான் கட்­சியை விட்டு நீக்­கு­வ­தாக ஓபி­எஸ் அறி­வித்­துள்­ளார்.

கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் ஓபி­எஸ்ஸை கட்­சியை விட்டு நீக்­கிய நிலை­யில், அவ­ரது மகன்­கள் ரவீந்­தி­ர­நாத் எம்பி, ஜெய பிர­தீப் ஆகி­யோரை நேற்று முன்­தி­னம் மாலை கட்­சி­யி­லி­ருந்து பொதுக் குழுச் செய­லர் பழ­னிச்­சாமி நீக்கியதாக அறி­வித்­தார்.

அத்­து­டன், முன்­னாள் அமைச்­சர் வெல்­ல­மண்டி நட­ரா­ஜன், முன்­னாள் எம்பி, எம்­எல்­ஏக்­கள் உள்­பட ஓபி­எஸ் ஆத­ர­வா­ளர்­கள் 18 பேர் நீக்­கப்­பட்­ட­னர்.

கட்­சி­யின் கொள்­கை­க­ளுக்கு முர­ணா­கச் செயல்­பட்­ட­தா­லும் கட்சி யின் ஒழுங்கு சீர்­கு­லை­யும் வகை­யில் நடந்­து­கொண்­ட­தா­லும் அவர்­கள் கட்­சியை விட்டு நீக்­கப்­ப­டு­வ­தா­க­ இபி­எஸ் தெரி­வித்தார்.

இதற்­குப் பதி­லடி கொடுத்­துள்ள ஓபி­எஸ், பழ­னிச்­சா­மியை தான் நீக்­கு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

முன்­னாள் அமைச்­சர்­கள் முனு சாமி, சீனி­வா­சன், செங்­கோட்டை யன், விஸ்­வ­நா­தன், தங்­க­மணி, வேலு­மணி, உத­ய­கு­மார், வளர்­மதி, கோகுல இந்­திரா, சண்­மு­கம், மணி­யன், செல்­லூர் ராஜு உட்­பட 22 பேரை நீக்­கு­வ­தா­க­வும் ஓபி­எஸ் தெரி­வித்­துள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­ய­போது, ''கடந்த மக்­க­ள­வைத் தேர்­த­லில் அதி­மு­க­வுக்கு ஒரு இடத்­தில்­தான் ஓ.பி.ரவீந்­தி­ர­நாத் மூலம் வெற்றி கிடைத்­தது. அவரை கட்­சி­யில் இருந்து நீக்கியிருப்­பது சர்­வா­தி­கா­ரத்­தின் உச்­ச­நிலை. இபிஎஸ் அறி­விக்­கும் எந்த அறிவிப்­பும் அதி­மு­க­வின் சட்­டப்­படி செல்­லாது," என கண்­ட­னம் தெரி­வித்­தார்.

"நான் இன்­றும் அதி­முகவின் ஒருங்கிணைப்­பா­ள­ரா­கத் தொடர்­கி­றேன். ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்கிணைப்­பா­ளர் பத­வி­கள் தொடர்­பாக தேர்­தல் ஆணை யத்­துக்குத் தெரிவிக்­கப்­பட்டு, ஆணை­ய­மும் அங்கீகரித்­துள்­ளது. இப்­ப­த­வி­க­ளுக்­கான காலம் ஐந்து ஆண்­டு­கள் வரை உள்­ளது," என்று ஓபிஎஸ் கூறி­யுள்­ளார்.