ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கு தனி வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குரங்கம்மை நோய்க்கு தனி வார்டு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 mins read
7920188b-79d5-41a2-9dee-5cd156a8d50e
படம்: தமிழக ஊடகம் -

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அந்நாட்டின் முதல் குரங்கம்மை நோய்த் தொற்று கன்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். முகம், கைகளில் கொப்பளங்கள் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்படுகிறது. சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

குரங்கம்மை நோயை கண்டுபிடிக்க ஐ.சி.எம்.ஆர். ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சென்னையில் அந்த ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் குரங்கம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

செய்தி: தமிழக ஊடகம்