பத்து ஆண்டுகளுக்குள் கடல் எல்லையைக் கடந்தால் சிறை: இலங்கை நீதிபதி எச்சரிக்கை

பத்து ஆண்டுகளுக்குள் கடல் எல்லையைக் கடந்தால் சிறை: இலங்கை நீதிபதி எச்சரிக்கை

1 mins read
2f9a5920-30d1-4c8c-b902-57dea8e41af5
-

புதுக்­கோட்டை: அண்­மை­யில் இலங்­கைக் கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்ட தமி­ழக மீன­வர்­கள் 11 பேர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த 4ஆம் தேதி புதுக்­கோட்டை மாவட்­டம் ஜெக­தாப்­பட்­டி­னத்­தைச் சேர்ந்த ஐந்து மீன­வர்­கள் மீன்­பிடிக்­கச் சென்­ற­போது இலங்கை கடற்­ப­கு­திக்­குள் நுழைந்­த­தா­கக் கூறி, அந்­நாட்டு கடற்­படை கைது செய்­தது. இதே போல், கடந்த 11ஆம் தேதி­யும் ஆறு மீன­வர்­கள் கைதாகி­னர்.

இந்­நி­லை­யில், கைதான 11 பேரும் இலங்­கை­யில் உள்ள ஊர்க்­கா­வல்­துறை நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட போது அவர்­களை விடு­தலை செய்­யு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

எனி­னும், அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­குள் மீண்­டும் கடல் எல்­லை­யைக் கடந்து வந்து மீன்­பிடித்­தால் 18 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­தார்.

மேலும், பறி­மு­தல் செய்­யப்­பட்ட மீன­வர்­க­ளின் இரு பட­கு­களும் அர­சு­டைமை ஆக்­கப்­படும் என்­றும் நீதி­பதி தீர்ப்­பில் குறிப்­பிட்­டுள்­ளார்.