கும்பகோணம் தீ விபத்து: குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் தீ விபத்து: குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி

1 mins read
9408b878-e191-40bf-82b3-19de8b0b0fa3
-

கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளுக்கு நேற்று கண்ணீர் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். நேற்று 18ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கும்பகோணத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோரும் பொதுமக்களும் அவர்களின் புகைப்படங்களை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேலும், இந்நாளை குழந்தைகள் பாது காப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்: தமிழக ஊடகம்