மதுரை: மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியதை அடுத்து 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து நேற்று காலை 119.29 அடியை எட்டியது.
அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் கனமழை காரணமாக நிரம்பி உள்ளதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு நீர் வரத்து ஒரு லட்சம் கன அடியை தாண்டி உள்ளது.
ஒகேனக்கல் பகுதி வெள்ளக் காடாக காட்சி அளிக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு புதிதாக இருபது இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

