சென்னை: தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முந்தைய ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜூன் மாதத்தில் ஒன்பது மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், நீலகிரி, சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதாக பொதுப்பணித்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
எனினும் மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது நல்ல செய்தியாகும். வேலுார், தர்மபுரி, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

