'தமிழ்நாடு நாள் விழா'வில் மூன்று நாள் கண்காட்சி

'தமிழ்நாடு நாள் விழா'வில் மூன்று நாள் கண்காட்சி

1 mins read
709c33f2-9b71-4835-95fa-ce53b1aca944
-

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கொண்டாடப்பட உள்ள 'தமிழ்நாடு நாள் விழா'வில் கருத்தரங்கம், குறும்படங்கள் வெளியிடப்பட உள்ளன. அத்துடன், சென்னையில் மூன்று நாள்களுக்கு கண்காட்சியும் நடைபெற உள்ளதாக தகவல். கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட உள்ளன.

இம்மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வா் அண்ணாவால் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி பெயர் சூட்டப்பட்டது. இதனைக் கொண்டாடும் வகையில், இன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். விழாவில் இலக்கிய மாமணி, தமிழ்த் தென்றல், அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையாா் விருது போன்ற விருதுகளும் அளிக்கப்பட உள்ளன.