தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேராசிரியர் எனக் கூறி மறுமணம் செய்த இட்லி கடைக்காரர்

2 mins read
0fffa779-869e-424c-935c-bed369acfb23
பிரபாகரன். படம்: ஊடகம் -

சென்னை: தனக்கு ஏற்­கெ­னவே திரு­ம­ண­மாகி மனை­வி­யும் குழந்­தை­யும் இருப்­பதை மறைத்து, சென்னை ஐஐ­டி­யில் பேராசிரியராக வேலை பார்ப்பதாகக் கூறி, பெண் மருத்­து­வரைத் திரு­ம­ணம் செய்து மோசடி செய்­துள்ள இட்லி கடை யின் உரி­மை­யாளா் கைது செய்­யப்­பட்டாா்.

சென்னை தியா­க­ராய நகர் அருகே உள்ள அடுக்­கு­மாடி குடி யிருப்­பில் வசிக்கும் சண்­முக மயூரி, 29, அங்குள்ள ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தில் மருத்துவரா­கப் பணி­யாற்றி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், மயூரிக்கும் வேளச்­சே­ரி­யைச் சேர்ந்த பிர­பா­க­ரன், 34, என்­பவருக்­கும் கடந்த 2020ல் இரு­வீட்­டார் சம்­ம­தத்­து­டன் திருமணம் நடை­பெற்றது.

பொறி­யி­யல், தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­யான சென்னை ஐஐ­டி­யில் முனைவா் பட்­டம் பெற்று, அங்­கேயே பேரா­சி­ரி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தா­கக் கூறிய பிரபாகரனுக்கு 111 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்­சம் ரொக்­கம், 5 கிலோ வெள்­ளிப் பொருள்­கள், ரூ.15 லட்­சம் மதிப்­பி­லான கார் வர­தட்­ச­ணை­யாக பெண் வீட்டார் கொடுத்­துள்­ள­னர்.

திரு­ம­ணமான சில மாதங்­க­ளி­லேயே தினமும் மதுபோதையுடன் வீட்­டுக்கு வந்த பிரபாகரன், வீடு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டு மயூரியை அடித்து சித்தி­ர­வதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்­த மயூரி, கணவரைப் பற்றி தனது தம்பியுடன் சேர்ந்து விசாரித்தபோது, மனவேதனை அடைந்தார்.

முதலில் பேராசிரியர் என ஏமாற்றி திரு­ம­ணம் செய்­தது வெளிச்சத்துக்கு வந்தது.

அடுத்ததாக, பிர­பா­க­ர­னுக்கு ஏற்ெகனவே வேறு ஒரு பெண்­ணு­டன் திரு­ம­ண­மாகி குழந்தை இருப்­ப­தும் அதனை மறைத்து தன்னை இரண்டாவது திரு­ம­ணம் செய்து மோச­டி­யில் ஈடு­பட்­ட­தும் தெரி­ய­வந்­தது.

இதையடுத்து, சென்னை அசோக் நகர் அனைத்து மக­ளிர் காவல்நிலை­யத்­தில், கண­வர் மீது மயூரி புகார் அளித்­தார்.

வர­தட்­சணைக் கொடுமை, ஆபா­ச­மாகப் பேசு­தல், நம்­பிக்கை துரோ­கம், ஏமாற்­று­தல், கொலை மிரட்­டல் உள்­ளிட்ட ஏழு பிரி­வு­க­ளின் கீழ் வழக்குப் பதிந்து, பிர­பா­க­ரனை நேற்று முன்தினம் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.

தலை­ம­றை­வான பிர­பா­க­ரனின் தந்தை விஸ்­வ­நா­தன், 70, தாய் மஞ்­சனை, 65, சகோ­தரா் கண்­ண­தா­சன், 38, அவ­ரது மனைவி வனிதா, 32, மற்­றொரு சகோ­தரா் நெப்­போ­லி­யன், 31, ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

விசா­ர­ணை­யில், பிர­பா­க­ரன், சண்­முக மயூரி நகைகளை அடகு வைத்து அந்தப் பணத்­தின் மூலம் அசோக்­ந­க­ரில் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் சோ்ந்து இட்லி கடை நடத்திவந்­தது தெரி­ய­வந்­தது.