சென்னை: குரங்கு அம்மை குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 மற்றும் குரங்கு அம்மை கண்காணிப்புப் பணிகளை அைமச் சர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த மே மாதம் முதல் இதுவரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட 63 நாடுகளில் 9,647 பேருக்கு குரங்கு அம்மையின் தாக்கம் உறுதியாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துலக விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
"விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணி களுக்கு ெகாரோனா தொற்று மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
"அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட 63 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அவர்களது முகம் அல்லது கைகளில் ஏதாவது கொப்பளங்கள், காய்ச்சல் போன்ற பாதிப்பு கள் உள்ளனவா என்பதை சோதித்து வருகின்றனர்.
"இந்த ஜூலை மாதத்தில் மட்டும் விமானம் மூலம் வந்த 1,987 பேருக்குப் பரிசோதனை நடத்தியதில் 39 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக அமைச்சர் கூறினார்.
"நாட்டில் 15 இடங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியும் மையம் அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னையிலும் ஒரு மையத்தை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது," என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

