ரூபாய் நோட்டு மிதப்பதாக எண்ணி ஏமாந்த கூட்டம்

ரூபாய் நோட்டு மிதப்பதாக எண்ணி ஏமாந்த கூட்டம்

1 mins read
9b0eadd3-07d2-41c7-84d4-cc825a9d1242
-

தூத்துக்குடி: கழிவு நீர் ஓடையில் பணம் மிதந்து வந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ஒருவர், அதனைக் கையில் எடுத்துப் பார்த்தபின்னர் அது சிறு குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகே கழிவுநீர் ஓடை உள்ளது.

இந்த ஓடையில் திடீரென ரூ.2,000, ரூ.200, ரூ.100, ரூ.50 நோட்டுகள் தாள் கப்பல்கள் போல் ஒவ்வொன்றாக மிதந்து வந்தன.

அங்கு நின்று கொண்டிருந்தவர் கள் இதனை மிகுந்த வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். கழிவுநீர் ஓடையில் கையை விட்டு பணத்தை எடுப்பதற்கு சிலர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவர் மட்டும் கையை விட்டு ரூ2,000 நோட்டை எடுத்துப் பார்த்து ஏமாற்றம் அடைந்தார்.