பழனிச்சாமி: மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்

பழனிச்சாமி: மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்

1 mins read
957d3603-ced8-40a2-9592-f983eff1700b
-

சென்னை: இணைய சூதாட் டத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வராவிடில், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கையில், திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் கொலை, கொள்ளை, போதை, இணையச் சூதாட்டங்கள் போன்ற வற்றால் மாநிலம் சீரழிந்து வருவ தாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இணையச் சூதாட்டத்தில் பல் லாயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. ஆட்சியாளர்கள் சூதாட்ட நிறு வனங்களுடன் கைகோர்த்து, பல கோடிகளைத் தரகாகப் பெற்றுக் கொண்டு சட்டங்களை இயற்றா மல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்து குற்றச் செயல்களையும் ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.