தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவி மரணம்: கல்வீச்சு, தீவைப்பு; 30 பேர் கைது

2 mins read
a6014184-ef09-46c5-8817-c5899beba27e
போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டாமல் கட்டுப்படுத்தும் காவலர்கள். தற்போது அங்கு ஒரு டிஎஸ்பி உட்பட 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். படம்: ஒன்இந்தியா ஊடகம் -

கள்­ளக்­கு­றிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனி­யார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பில், மாணவி இறப்புக் கான உண்மைக் காரணம் தெரி யும்வரை உடலை வாங்கமாட்டோம் என மறுத்து அவரது ெபற்­றோர், உறவினர், மாணவர்­கள் அமைப்­பி­ன­ர் நேற்று ஆறாவது நாளாகப் போராட்­டம் நடத்தினர்.

கடந்த 12ஆம் தேதி பள்ளி விடுதியின் மூன்றாவது மாடி­யில் இருந்து குதித்து மாணவி இறந்து­விட்­ட­தாக பள்ளி நிர்­வா­கத்­தி­னர் கூறிவந்­த­னர்.

ஆனால், ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் மாணவியின் உடை களில் ரத்தக் கறைகள் இருந்த தாகவும் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனால், கொதித்துப்போன பெற்றோர், மாண­வி­யின் இறப்­பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, பள்ளி நிர்­வா­கம் மீது நட­வ­டிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள பள்ளி முன்பு நேற்று 500க்கும் மேற்­பட்­டோர் திரண்டு சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு முழக்கமிட்ட போராட்­டக் காரர்களைக் காவ­லர்­க­ளால் கட்டுப் படுத்த முடி­ய­வில்லை.

தங்களது தடுப்பையும் மீறி பள்ளி வளா­கத்­துக்­குள் நுழைய முயன்ற பேராட்­டக்­கா­ரர்­கள் மீது காவலர்கள் தடி­யடி நடத்தி கூட்­டத்­தைக் கலைக்க முயன்­ற­னர்.

இதனால், ஆத்­தி­ரம் அடைந்த போராட்­டக்­கா­ரர்­கள், காவ­லர்­கள் மீது கற்­களை வீசி தாக்குதலில் ஈடு­பட்­ட­னர். இதில் டிஐஜி பாண்­டி­யன் உள்­ளிட்ட 20 காவ­லர்­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

சாலை­யோ­ரம் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த காவல்துறை வாக­னங்­களையும் போராட்­டக்­கா­ரர்­கள் அடித்து நொறுக்கி, தீவைத்து எரித்­த­னர். பள்ளி வளா­கத்­தில் நுழைந்து கற்­களை வீசித் தாக்கி சூறை­யா­டி­னர். இதையடுத்து, காவலர்கள் இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக 30 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, அந்­தப் பகு­தி­யில் பதற்­ற­மான சூழல் நிலவி வரு­கிறது.

இதனிைடயே, முதல்­வர் ஸ்டா லின் தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "கள்­ளக்­கு­றிச்­சி­யில் நில­வி­வ­ரும் சூழல் வருத்­த­ம­ளிக்­கிறது. மாண வியின் மர­ணத்தில் தொடர்புடைய குற்­ற­வா­ளி­கள் நிச்­ச­யம் தண்­டிக்­கப்­ப­டு­வார்­கள். அர­சின் நட­வ­டிக் கைகள் மீது நம்­பிக்கை வைத்து ­மக்­கள் அமைதிகாக்க வேண்­டு கிறேன்," எனப் பதி­விட்டுள்­ளார்.