கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், மாணவி இறப்புக் கான உண்மைக் காரணம் தெரி யும்வரை உடலை வாங்கமாட்டோம் என மறுத்து அவரது ெபற்றோர், உறவினர், மாணவர்கள் அமைப்பினர் நேற்று ஆறாவது நாளாகப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 12ஆம் தேதி பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறிவந்தனர்.
ஆனால், ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் மாணவியின் உடை களில் ரத்தக் கறைகள் இருந்த தாகவும் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால், கொதித்துப்போன பெற்றோர், மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள பள்ளி முன்பு நேற்று 500க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு முழக்கமிட்ட போராட்டக் காரர்களைக் காவலர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை.
தங்களது தடுப்பையும் மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைய முயன்ற பேராட்டக்காரர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் டிஐஜி பாண்டியன் உள்ளிட்ட 20 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீவைத்து எரித்தனர். பள்ளி வளாகத்தில் நுழைந்து கற்களை வீசித் தாக்கி சூறையாடினர். இதையடுத்து, காவலர்கள் இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர். இந்தக் கலவரம் தொடர்பாக 30 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதனிைடயே, முதல்வர் ஸ்டா லின் தனது டுவிட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாண வியின் மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அரசின் நடவடிக் கைகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அமைதிகாக்க வேண்டு கிறேன்," எனப் பதிவிட்டுள்ளார்.